விநாயகர் சதுர்த்தி: நாமக்கல் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்
நாமக்கல்: சதுர்த்தியை முன்னிட்டு, மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோவிலில், சுவாமிகளுக்கு சிறப்பு அபி?ஷகம், ஆராதனை நடந்தது.
ஆண்டு தோறும், நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். சதுர்த்தியை முன்னிட்டு, பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து பூஜை செய்யப்பட்டு, அவற்றை, ஊர்வலமாக எடுத்து சென்று, நீர்நிலைகளில் கரைப்பர். தற்போது, உலகம் முழுவதும், கொரோனா வைரஸ் தொற்று பரவி, மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில், மார்ச், 24 முதல், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதையடுத்து, பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கவும், ஊர்வலமாக எடுத்து சென்று, நீர் நிலைகளில் கரைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி, நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில், விநாயகர் கோவிலில், சிறப்பு அபி ?ஷகம், ஆராதனை நடந்தது. நாமக்கல், கடைவீதி சக்தி விநாயகர் கோவிலில், சுவாமிக்கு, திருமஞ்சனம், பால், நெய், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு நறுமண பொருட்களால் அபி?ஷகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, முத்தங்கி அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதேபோல், எஸ்.பி., புதூர் செல்வ கணபதி கோவிலில், சுவாமிக்கு சிறப்பு அபி?ஷகம் செய்யப்பட்டது. சுவாமி சயன விநாயர் அலங்காரத்திலும், மூலவர் வெள்ளி கவசத்திலும் காட்சியளித்தனர். மாவட்டம் முழுவதும் விநாயகர் கோவில்களில் சிறப்பு அபி?ஷகம் நடந்தது.