உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை கோவில்களில் விநாயகர் சதுர்த்தி கோலாகலம்

கோவை கோவில்களில் விநாயகர் சதுர்த்தி கோலாகலம்

கோவை; கோவை கோவில்களில் வழக்கமான உற்சாகத்துடனும், பாரம்பரிய கலாசாரத்துடனும், விநாயகர் சதுர்த்தி விழா, விமரிசையாக கொண்டாடப்பட்டது.புலியகுளம் முந்திவிநாயகர் கோவிலில், முந்திவிநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. காலை 6:00 மணிக்கு, கணபதி ஹோமம் நடந்தது.


சிவாச்சாரியார்கள், வேதவிற்பன்னர்கள் வேதங்கள் முழங்க பாராயணம் செய்யப்பட்டது. ஈச்சனாரி விநாயகர் கோவிலில் அதிகாலை, 4:00 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. வேத பாராயணத்துடன், மங்கள இசை முழங்கியது. சுவாமிக்கு சுவர்ண அலங்காரம் செய்யப்பட்டு, தங்ககிரீடம் அணிவிக்கப்பட்டது.இவ்விரு கோவில்களிலும், பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. இணையம் வாயிலாக சுவாமி அலங்காரம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.ரேஸ்கோர்ஸ் 108 விநாயகர் கோவில், சாரதாம்பாள் கோவில், கோனியம்மன் கோவில், தண்டுமாரியம்மன் கோவில், ஆர்.எஸ்.புரம், ரத்தின விநாயகர், ராமச்சந்திரா சாலையிலுள்ள சித்திவிநாயகர் கோவிலில் விநாயகருக்கு, நேற்று காலை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்படவில்லை. புறநகரிலுள்ள விநாயகர் கோவில்களில் பக்தர்கள், சமூக இடைவெளியோடு அனுமதிக்கப்பட்டனர். பொங்கல், மோதகம், சுண்டல் உள்ளிட்ட பிரசாதங்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. நகரிலுள்ள சிறு கோவில்கள் திறக்கப்பட்டு, விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது. மதியம் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன. புறநகரிலுள்ள பெரும்பாலான கோவில்களில் வழக்கமான உற்சாகத்துடன், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !