தீவனுார் பெருமாள் கோவிலில் திருமணம் செய்ய தடை
ADDED :1870 days ago
விழுப்புரம் : தீவனுார் பெருமாள் கோவிலில் கொரோனா ஊரடங்கு உத்தரவு வரை திருமணம் நடத்த தடை விதித்து நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. திண்டிவனம் அடுத்த தீவனுார் கிராமத்தில் லட்சுமிநாராயண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், கொரோனா ஊரடங்கில் திருமணம் நடப்பதால், பொதுமக்கள் அதிகம் கூடுவதாக விழுப்புரம் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறைக்கு புகார் வந்தது.இதையடுத்து, கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள வரை அக்கோவிலில் திருமணம் நடத்த தடை விதித்து நேற்று நோட்டீஸ் ஒட்டப்பட்டது.இந்து சமய அறநிலையத்துறை செஞ்சி ஆய்வாளர் அன்பழகன் மற்றும் அலுவலர்கள் நோட்டீஸ் ஒட்டினர்.