உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மும்பையில் எளிமையான முறையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்

மும்பையில் எளிமையான முறையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்

மும்பை : மஹாராஷ்டிராவில் கொரோனா தொற்றால் மும்பையில் 17 ஆண்டுகளில் இல்லாத வகையில் விநாயகர் சதுர்த்தி விழா கட்டுப்பாடுகளுடன் எளிமையாக கொண்டாட வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தினர்.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் உயர்ந்து வருவதால் விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட பல்வேறு விழாக்களை எளிமையாக கொண்டாட அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பொதுவாக மஹாராஷ்டிராவில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி 10 நாட்கள் வரை வெகு விமரிசையாக கொண்டாடப்படும். ஆனால் தொற்றை கருத்திற்கொண்டு, நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் ஆடம்பரமின்றி, எளிமையாக கொண்டாடப்பட்டது. நோய் தொற்றுக்கு மத்தியில், மும்பையில் 17 ஆண்டுகளில் இல்லாத வகையில், அமைதியாக கணேஷ் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.

இந்த ஆண்டு கணேஷ் சதுர்த்தி 2003 ஆம் ஆண்டிலிருந்து, இதுவரை பதிவு செய்யப்படாத வகையில் மிகவும் அமைதியாக இருந்தது. பெரும்பாலான இடங்களில் மக்கள் / கூட்டம் இல்லை. மேலும் ஒலிபெருக்கிகள் போன்ற கருவிகளும் வைக்க அனுமதி இல்லை. கணேஷ் உத்சவத்திற்கான சிலை விசர்ஜனம் செய்யும் முதல்நாளில், மும்பையில் ஊர்வலம் கடந்த ஆண்டில் சத்த அளவை விட இந்த ஆண்டு குறைவாக இருந்தது. சதுர்த்தி விழாவில் இரைச்சல் அளவு இந்த ஆண்டு மிகவும் குறைவாக இருந்தது. சத்தம் மாசுபாடு (ஒழுங்குமுறை மற்றும் கட்டுப்பாடு) விதிகள், 2000 இன் படி, குடியிருப்பு பகுதிகளில் பகலில் அதிகபட்சமாக 55 டெசிபல்கள் (டி.பி.) மற்றும் இரவில் 45 டி.பி. (DB) ஆக இருக்க வேண்டும். மாநிலத்தில் நேற்று ஒரு நாளில் 40,823 சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது. அவற்றில் 39,845 சிலைகள் வீடுகளில் இருந்தும், 978 சிலைகள் பொதுவிடங்களில் இருந்தும், இதில் 22,859 சிலைகள் செயற்கை குளங்கள் அமைக்கப்பட்டு விசர்ஜனம் செய்யப்பட்டன. நோய் பாதிப்பு அச்சுறுத்தலால், மக்களின் பாதுகாப்பு குறித்து மாநில அரசு / நிர்வாகம் கவனமாக உள்ளது. மக்களும் விழிப்புணர்வுடனும், எச்சரிக்கையாகவும் உள்ளனர். மற்ற சிலைகள் விசர்ஜனம் செய்யும் நாட்களிலும் பாதுகாப்பு நடவடிக்கை தொடரும் என மும்பை மாநகராட்சியின் ஆணையர் நரேந்திர பார்ட் கூறினார்.

மும்பை போலீசார் ஒருவர் கூறுகையில், நாங்கள் இரைச்சல் குறைப்பு நடவடிக்கைகளை கண்டிப்பாக செயல்படுத்தி உள்ளோம். ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டு, பெரிய கூட்டங்கள் கூடிவருவதற்கான வாய்ப்புகள் உள்ள இடங்களில், அதிகமான போலீசார் அங்கு நிறுத்தப்பட்டு சமூக தூரம் பராமரிக்கப்பட்டு வருகிறது. நகரத்தில் உள்ள அனைத்துமண்டலங்களையும் இரைச்சல் விதிகளை மீறக்கூடாது. நகரம் இந்த ஆண்டு எளிமையாக விழாவை கொண்டாடுகிறது. சத்தம் மாசுபாடு என்பது அங்கீகரிக்கப்படாத நெருக்கடியாகும், அங்கு தேவையற்ற அல்லது அதிகப்படியான ஒலி மனித ஆரோக்கியத்தில் தீங்கு விளைவிக்கும். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !