உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முழு ஊரடங்கு நாளில் கோவில் முன் திருமணம்

முழு ஊரடங்கு நாளில் கோவில் முன் திருமணம்

விருத்தாசலம் : முழு ஊரடங்கு நாளில், விருத்தாசலம் கோவில் வாசலில் ஒரு ஜோடிக்கு திருமணம் நடந்தது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவில் வாசலில், நேற்று காலை 7:00 மணியளவில், விருத்தாசலம் அடுத்த டி.கோபுராபுரம் வீரமுத்து மகன் ராம்குமார். வடலுார் அடுத்த மணிவாசகம் மகள் பிரதீபா ஆகியோருக்கு திருமணம் நடந்தது. .உறவினர்கள் 10 பேர் முன்னிலையில், அர்ச்சகர் திருமணம் நடத்தி வைத்தார்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !