மதுரை நிர்வாக அலுவலகத்தில் சதுர்த்தி விழா
ADDED :1871 days ago
மதுரை, தமிழ்நாடு பிராமணர் சங்க மாநில அமைப்பு சார்பில் மதுரை நிர்வாக அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. கூடலழகர் பெருமாள் கோயில் அர்ச்சகர் சுந்தரராஜ பட்டர் தலைமையில் விநாயகருக்கு சிறப்பு பூஜை நடந்தது. மாநில உதவி தலைவர் ரவி, விநாயகர் குறித்து பேசினார். மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி, அலுவலக ஊழியர்கள் முத்தம்மாள், உஷா ராணி பங்கேற்றனர்.