பூஜை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு
ADDED :1870 days ago
புதுச்சேரி: வீடுகளில் வைத்து பூஜை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பொதுமக்கள் நேற்று புதுச்சேரி கடலில் கரைத்தனர். புதுச்சேரியில் கடந்த 22ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக, பொது இடங்களில் பெ ரிய அளவிலான விநாயகர் சிலைகள் வைத்து வழிபடவும், கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் தடை விதித்த அரசு, பொதுமக்கள் களிமண் விநாயகர் சிலைகளை வீடுகளில் வைத்து வழிபட அறிவுறுத்தியது. அதன்படி, வீடுகளில் வைத்து பூஜை செய்த களிமண் விநாயகர் சிலைகளை, மூன்றாம் நாளான நேற்று குருசுக்குப்பம் மற்றும் புதுச்சேரி, தலைமை செயலகம் எதரில் உள்ள கடற்கரைக்கு கொண்டு சென்று பூஜை செ ய்து வணங்கினர். பின்னர், விநாயகர் சிலைகளை கடலில் விட்டு கரைத்தனர்.