சஷ்டி பூஜை: வேல் பூஜை செய்த பக்தர்கள்
ADDED :1871 days ago
திருவாடானை: திருவாடானை, ஆந்தகுடி, நம்புதாளையில்உள்ள ஹிந்து கடவுள் முருகன் கோயில்களில் ஆவணி சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. மஞ்சள்,பால், பன்னீர், பஞ்சாமிர்தம் போன்ற பல்வேறு வகையான அபிேஷகங்களும்,தீபாராதனைகளும் நடந்தது. சஷ்டியை முன்னிட்டு, வீடுகளிலும் பக்தர்கள் வேல் பூஜை செய்து வழிபாடு செய்தனர்.
ஆர்.எஸ்.மங்கலம்: சஷ்டியை முன்னிட்டு ஆர்.எஸ்.மங்கலம் கைலாசநாதர் கோவில் சுப்பிரமணியர் சன்னதியில் ஹிந்து கடவுள் முருகனுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிேஷக ஆராதனை நடைபெற்றன. பின்பு நடைபெற்ற சிறப்பு பூஜையில், பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.