பனைவிதை விநாயகர் சிலைகள் கரைப்பு
ADDED :1871 days ago
திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாய் கரைகளில் தேசமே தெய்வம் அமைப்பு சார்பில் பனைவிதை விநாயகர் களிமண் சிலைகள் நடப்பட்டு கரைக்கப்பட்டன. அமைப்பினர் சதுர்த்தியன்று 500 வீடுகளுக்கு பனை விதை விநாயகர் சிலைகள் வழங்கியிருந்தனர். தேசமே தெய்வம் நிறுவனர் ராஜபாண்டி தலைமையில் நிர்வாகிகள் நாராயணமூர்த்தி, ராம கிருஷ்ணன், கோதண்டராமன், பா.ஜ., மண்டல் தலைவர் வேல்முருகன், அகில பாரத அனுமன் சேனா மாநில முதன்மை பொதுச் செயலாளர் ராமலிங்கம் கலந்து கொண்டனர். நிர்வாகிகள் கூறுகையில், ஏராளமான நன்மைகள் தரும் பனை மரங்களை வளர்க்கவும், இளைஞர்களிடையே ஆன்மிக சிந்தனையை மேலோங்கச் செய்யவும் பனைவிதை விநாயகர் சிலைகள் வழங்கப்பட்டன, என்றனர்.