உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முருகனுக்கு உகந்த வளர்பிறை; முத்துக்குமாரசுவாமிக்கு பூஜை

முருகனுக்கு உகந்த வளர்பிறை; முத்துக்குமாரசுவாமிக்கு பூஜை

வீரபாண்டி: வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு, முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபி ?ஷகம், அலங்கார பூஜை நடத்தப்பட்டது. ஆட்டையாம்பட்டி, வேலநத்தம் பாவடியில் உள்ள முத்துக்குமார சுவாமி கோவிலில், முருகனுக்கு உகந்த வளர்பிறை சஷ்டியான நேற்று, மூலவருக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபி ?ஷகம் நடத்தப்பட்டது. குறைந்த அளவிலான பக்தர்கள், சமூக இடைவெளியை கடைப்பிடித்து, கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்தனர். சிறப்பு அலங்காரம் செய்து, வழக்கம் போல் பூஜைகள் நடத்தப்பட்டன. வளர்பிறை சுபமுகூர்த்த தினம் என்பதால், புதுமண தம்பதியர் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

* ஆத்தூர் அருகே, வடசென்னிமலையில், பிரசித்தி பெற்ற பாலசுப்ரமணியர் கோவில் உள்ளது. கொரோனா காரணமாக, கோவில் திறக்கப்படவில்லை. நேற்று, சஷ்டி நாளையொட்டி, பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் கோவில் அடிவார படியில் உள்ள முருகன் சுவாமி முன், கந்த சஷ்டி பாடல்களை பாடி முருகனை வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !