கோவில் கோசாலையில் 2 கன்றுகளை ஈன்ற பசு
ADDED :1872 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், இஞ்சிமேடு பெரியமலை சிவன் கோவிலில் உள்ள கோசாலையில், 15 பசுக்கள் பராமரிக்கப்படுகிறது. இங்குள்ள பசுக்களை கொண்டு தினமும், சுவாமிக்கு கோ பூஜை நடத்தப்படுகிறது. கோசாலையில் உள்ள ஒரு பசு நேற்று, ஒரு ஆண், ஒரு பெண் கன்று என, இரண்டு கன்றுகளை ஒரே நேரத்தில் ஈன்றது. தகவலறிந்த அப்பகுதி மக்கள், பசுவையும் கன்றுவையும் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.