உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விழுப்புரம் ஆதிவாலீஸ்வரர் கோவில் குளம் சீரமைப்பு

விழுப்புரம் ஆதிவாலீஸ்வரர் கோவில் குளம் சீரமைப்பு

விழுப்புரம்: விழுப்புரத்தில் ஆதிவாலீஸ்வரர் கோவில் குளம் துார்வாருதல், மணல் தடுப்பு அரண் அமைக்கும் பணிகள் ஜரூராக நடக்கிறது. விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ வாலாம்பிகை ஆதிவாலீஸ்வரர் கோவில் உள்ள து. கோவிலுக்கு சொந்தமான குளம் பல ஆண்டுகளாக துார்வாரப்படாமல் மணல் மூடி குப்பை மேடானது. இதையடுத்து, நகராட்சி சார்பில், 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஆதிவாலீஸ்வரர் கோவில் குளம் சீரமைப்பு பணி நடக்கிறது. இந்த பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், பணிகளின் தரம் மற்றும் ஊழியர்கள் பணிகள் சரியாக செய்கிறார்களா என்பது குறித்தும் அவ்வப்போது, நகராட்சி கமிஷனர் தட்சணாமூர்த்தி ஆய்வு செய் து வருகிறார். தற்போது, குளத்தை சுற்றிலும், மணல் மேடுகள், தடுப்பு அரண்கள் போல நிரப்பப்பட்டு, கீழ்பகுதிகளில் சுற்றிலும், சிமென்ட் கற்கள் பதிக்கும் பணிகள் முழுவீச்சில் நடை பெற்று வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !