உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவகிரி கோயிலில் இன்று கும்பாபிஷேகம்

சிவகிரி கோயிலில் இன்று கும்பாபிஷேகம்

சிவகிரி : சிவகிரி துர்க்கையம்மன் கோயிலில் இன்று (18ம் தேதி) மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. சிவகிரி 11வது வார்டில் உள்ள தேவேந்திரகுல சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட துர்க்கையம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயிலில் இன்று (18ம் தேதி) மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதனை முன்னிட்டு நேற்று மாலை 4 மணிக்கு சப்பரபவனி நடந்தது. சமுதாய பொருளாளர் உலகநாதன் தலைமை வகித்தார். டவுன் பஞ்., தலைவர் ரணவீறு, இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். வடலூர் அருட்சுடர் ஆசிரியர் குருபக்கிரிசுவாமி சப்பர பவனியை துவக்கி வைத்தார். வள்ளலார் விநாயகர் ஆலய தர்மகர்த்தா சுப்பிரமணியன் கலந்து கொண்டார். இரவு 7 மணி முதல் 9 மணி வரை திருமந்திரயாஹகானம் அருளுரை நடந்தது. கும்பாபிஷேக நாளான இன்று (18ம் தேதி) காலை 4 மணி முதல் 6 மணி வரை திருமந்திரயாஹகான பூஜையும், 6 மணி முதல் 7.30 மணி வரை அம்மனுக்கு பலநிலை அபிஷேகங்கள் மற்றும் கும்பாபிஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை தேவேந்திர சமுதாய தலைவர் நடராஜன், செயலாளர் வேலுச்சாமி, பொருளாளர் உலகநாதன், துணைத் தலைவர் அய்யப்பன், துணை செயலாளர் சுப்பிரமணியன், செயற்குழு உறுப்பினர்கள் கோட்டூர் குருசாமி, இளையராஜா, தங்கம், மாரிமுத்து, ராமச்சந்திரன், லெனின், பொன்ராஜ் உட்பட பலர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !