உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புளியரை கோயிலில் குரு பெயர்ச்சி வழிபாடு

புளியரை கோயிலில் குரு பெயர்ச்சி வழிபாடு

புளியரை : புளியரை தட்சிணாமூர்த்தி கோயிலில் குரு பெயர்ச்சி வழிபாட்டில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். குரு பகவான் நேற்று மாலையில் மேஷ ராசியிருந்து ரிஷப ராசிக்கு பிரவேசித்தார். இதனை முன்னிட்டு தட்சிணாமூர்த்தி கோயில்களில் சிறப்பு பூஜை வழிபாடு நடந்தது. புளியரையில் புகழ்பெற்ற சிவகாமி அம்பாள் சமேதி சதாசிவமூர்த்தி, தட்சிணாமூர்த்தி கோயில் உள்ளது. இக்கோயிலில் குரு பெர்ச்சியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. முதல் நாள் இரவு தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இரண்டாவது நாளான நேற்று அதிகாலையில் கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சிகள் துவங்கியது. காலையில் தேவாரம் இன்னிசை, மதியம் பஜனை, சிறப்பு அபிஷேகம், ருத்ர ஏகாதசி, ஜெபம், ஹோமம் நடந்தது. மாலையில் நாதஸ்வர கச்சேரிக்கு பிறகு தட்சிணாமூர்த்திக்கு நறுமணப் பொருட்களால் மகாபிஷேகம், சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. குரு பெயர்ச்சி வழிபாட்டில் செங்கோட்டை யூனியன் சேர்மனும் அ.தி.மு.க.,தொகுதி இணை செயலாளருமான முருகையா, முருகேசன், ஐயப்பா டிரான்ஸ்போர்ட் பகவதிமுத்து (எ) ராஜா, பழனி செட்டியார் ஏஜன்ஸிஸ் ராமச்சந்திரன், புளியரை பஞ்.,தலைவர் மல்லிகா, துணைத் தலைவர் அழகிய திருச்சிற்றம்பலம் (எ) ஐயா, வார்டு உறுப்பினர்கள் மாரியம்மாள், குமாரி, வள்ளியம்மாள், குருமூர்த்தி, இ.மாரியப்பன், பாலசுப்பிரமணியன், சகாயமேரி, சண்முகராஜ், மு.மாரியப்பன், சுரேஷ்குமார், புதுமதி, செயலாளர் இசக்கி, பஞ்., பணியாளர்கள், கவியரசு கலர் ஸ்டுடியோ கவியரசு, கணக்கப்பிள்ளை பஞ்.,தலைவர் புன்னைவனம், வக்கீல்கள் சைலபதி சிவஞானம், குமார் பாண்டியன், ஆடிட்டர் சித்திரம், டி.பி.கே.மாடல் பள்ளி நாதன், ஜெய் பாக்யா குழுமத்தினர் உட்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. குரு பெயர்ச்சியை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து புளியரைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பாதுகாப்பு ஏற்பாடுகளை தென்காசி டி.எஸ்.பி.,பாண்டியராஜன் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !