உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோலியனூர் கோவிலில் குருபெயர்ச்சி ஆராதனை

கோலியனூர் கோவிலில் குருபெயர்ச்சி ஆராதனை

விழுப்புரம்:குருபெயர்ச்சியையொட்டி கோலியனூர் ஆதிவாலீஸ்வரர் கோவிலில் உள்ள தட்சணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.விழுப்புரம் அடுத்த கோலியனூர் ஆதிவாலீஸ்வரர் கோவிலில் நேற்று காலை 9 மணிக்கு குருபெயர்ச்சி ஹோமம் நடந்தது.தொடர்ந்து மாலை 6 மணிக்கு தட்சணாமூர்த்தி சுவாமிக்கு பால், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை, 6.30 மணிக்கு தீபாராதனையும் நடந்தது.இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் சிவக்குமார் சிவாச்சாரியார் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !