உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் திறப்பு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் திறப்பு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், 5 மாதங்களுக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

கொரோனாவால் நீண்ட நாட்கள் அடைக்கப்பட்டிருந்த திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் அரசு உத்தரவு படி திறக்கப்பட்டதால் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.  5 மாதங்களுக்கு பிறகு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டதை யொட்டி, தங்க கொடிமரம் அருகே சமூக இடைவெளியுடன் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பக்தர்கள், தெர்மல் ஸ்கேனர் பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர். கிரிவலம் செல்ல தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.  கிரிவலம் வந்தவர்களை போலீசார்  தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !