உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புல்லாணி கோயிலில் ராகு-கேது பெயர்ச்சி சிறப்பு பூஜை

திருப்புல்லாணி கோயிலில் ராகு-கேது பெயர்ச்சி சிறப்பு பூஜை

திருப்புல்லாணி: திருப்புல்லாணி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள நவக்கிரங்களுக்கு முன்பு ராகு -- கேது பெயர்ச்சிக்கான சிறப்பு பூஜை நடந்தது. நேற்று மதியம் 2:16 மணிக்கு ராகு பகவான் மிதுன ராசியில் இருந்து ரிஷப ராசிக்கும், கேது பகவான் தனுசு ராசியில் இருந்து விருச்சிகராசிக்கும் பெயர்ச்சி அடைவதை முன்னிட்டு சிறப்பு ஹோமம், சிறப்பு பூஜை காலை 8:00 முதல் மதியம் 12:00 மணி வரை நடந்தது. மூலவர்களுக்கு பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட 11 வகையான அபிஷேக ஆராதனை நிறைவேற்றப்பட்டது. பூஜைகளை ஜெகநாதன், ஹேமச்சந்திரன் செய்திருந்தனர். திருப்புகழ், தேவாரப்பாடல்களை ஓதுவார் அரியமுத்து பாடினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !