சோழவந்தான் கோயில்களில் ராகு, கேது பெயர்ச்சி
ADDED :1879 days ago
சோழவந்தான், சோழவந்தான் பிரளயநாதர், திருவேடகம் ஏடகநாதர் கோயில்களில் நேற்று மாலை 4:25 மணிக்கு ராகு, கேது பெயர்ச்சி விழா நடந்தது.ராகு பகவான் மிதுனத்திலிருந்து ரிஷபராசிக்கும்,கேது பகவான் தனுசு ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கும் பெயர்ச்சி அடைந்தனர். ராகு, கேதுவுக்கு சிறப்பு அபிேஷகம், வழிபாடுகள் நடந்தன.விக்கிரமங்கலம் கோவில்பட்டி மருதோதயஈஸ்வரமுடையார் கோயிலில் பூஜாரி பாண்டி தலைமையில் குழுவினர்சிறப்பு அபிஷேகம், பூஜைகள் செய்தனர்.