உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சி காமகோடி பீடத்தில் இன்று விஸ்வரூப யாத்திரை

காஞ்சி காமகோடி பீடத்தில் இன்று விஸ்வரூப யாத்திரை

மதுரை : தேனம்பாக்கம் பிரம்ம புரீஸ்வரர் கோவிலில், காஞ்சி விஜேயந்திர சரஸ்வதி சுவாமிகளின் சாதுர்மாஸ்ய விரத பூர்த்தியை முன்னிட்டு நடக்கும் விஸ்வரூப யாத்திரை, இன்று, 2ம் தேதி மாலை, 5:00 மணிக்கு www.kamakoti.org என்ற இணையதளத்தில் ஒளிபரப்பாகிறது.

பிரம்ம புரீஸ்வரர் கோவிலில், ஸ்யாஸ பூஜை நடந்ததை தொடர்ந்து, சாதுர்மாஸ்ய விரதத்தை அனுஷ்டித்தனர். விரதம் இன்று பூர்த்தியாகும் நிலையில், கோவில் ஓரிக்கை மணி மண்டபத்தில், விஸ்வரூப யாத்திரை நடக்கிறது.சாதுர்மாஸ்ய காலத்தில் பஞ்சாங்க சதஸ், அத்வைத சபா, அக்னிஹத்ர சதஸ், வேத பாராயணம், வித்வத் சபைகள், வாக்யார்த்த பாடம் மற்றும் சவுத் ஸோன் கலாசார மையம், தஞ்சை, காமகோடி பீடம் சார்பில், ஆன்லைனில் இசை நிகழ்ச்சிகள் நடந்தன.காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 86வது ஜெயந்தி விழாவில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன என, மேலாளர், சுந்தரேசன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !