உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரத்தில் விஜயகாந்த் பூஜை

ராமேஸ்வரத்தில் விஜயகாந்த் பூஜை

 ராமேஸ்வரம் : தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் ராமேஸ்வரத்தில் நடந்த பூஜையில் பங்கேற்றார். நேற்று ராமேஸ்வரம் வந்த விஜயகாந்த், பிரேமலதா உள்ளிட்ட சிலர் புரோகிதர் சாமிநாதன் வீட்டில் 3 மணி நேரம் நடந்த பூஜையில் பங்கேற்றனர். நேற்று ராகு கேது பெயர்ச்சி அடைந்ததால் சிறப்பு பூஜையில் பங்கேற்றார். விஜயகாந்தை படம் எடுக்காதபடி, அவரது உதவியாளர்கள் தடுத்தனர். பூஜை முடிந்ததும், அக்னி தீர்த்த கடலில் சங்கல்பம் செய்ய வந்த அவரை, பத்திரிக்கையாளர்கள் படம் எடுக்க தயாராக இருந்ததை கண்டதும் காரில் சென்று விட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !