பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் நடை திறப்பு
ADDED :1936 days ago
மோகனூர்: காந்தமலை பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு அபி?ஷகம் நடந்தது. தமிழகத்தில், மார்ச், 24 முதல், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. சிறிய மற்றும் அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களின் நடையும் அடைக்கப்பட்டன. கோவிலுக்கு வெளியே நின்று சுவாமியை வழிபட்டு செல்லும் நிலைக்கு பக்தர்கள் தள்ளப்பட்டனர். இந்நிலையில், அனைத்து வழிபாட்டு தலங்களையும் திறக்க அரசு அனுமதியளித்தது. அதன்படி, மோகனூர், காந்தமலை பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. தொடர்ந்து, சிறப்பு அபி?ஷகம், ஆராதனை நடந்தது. சந்தன காப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். 165 நாட்களுக்கு பின் நடை திறக்கப்பட்டதால், ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டு சென்றனர். மேலும், அசலதீபேஸ்வரர், நாவலடியான் உள்ளிட்ட கோவில்களும் திறக்கப்பட்டன.