சாய் தபோவனத்தில் ஆவணி மாத ஆரத்தி
ADDED :1881 days ago
நாமக்கல்: தொட்டிப்பட்டி, சாய் தபோவனத்தில், சுவாமி ஷீரடி சாய்பாபாவுக்கு சிறப்பு ஆரத்தி நிகழ்ச்சி நடந்தது. ஆவணி மாதம் மூன்றாம் வியாழனை முன்னிட்டு, நாமக்கல், வள்ளிபுரம் அடுத்த தொட்டிப்பட்டி, ஷீரடி சாய்பாபா சாய் தபோவனத்தில், சிறப்பு ஆரத்தி மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. காலை, 8:00 மணிக்கு சாய்பாபாவிற்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, காக்கட் எனும் ஆரத்தி, மதியான் ஆரத்தி, மஹா தீபாராதனை நடந்தது. ஊரடங்கால், 24 வாரங்களுக்குப்பின் நேற்று கோவில் திறக்கப்பட்டு பக்தர்கள் சமூக இடைவெளியுடன் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பக்கதர்கள் கொண்டுவந்த எந்த பொருளும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. சுவாமி பிரசாதமும் பக்தர்களுக்கு வழங்கப்படவில்லை. மாலை, 6:00 மணிக்கு சிறப்பு ஆரத்தி நடைபெற்றது.