உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மீனாட்சி கோயில் வைகாசி வசந்த உற்சவம்: நிர்வாகம் அறிவிப்பு!

மீனாட்சி கோயில் வைகாசி வசந்த உற்சவம்: நிர்வாகம் அறிவிப்பு!

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாக அதிகாரி ஜெயராமன் அறிக்கை : இக்கோயிலில், மே 25 முதல் ஜூன் 3 வரை வைகாசி வசந்த உற்சவமும், ஜூன் 3 முதல் 5 வரை திருஞானசம்பந்தர் திருவிழாவும் நடக்கிறது. இந்நாட்களில் கோயில் சார்பாகவோ, உபயதாரர் சார்பாகவோ, தங்கரதம், திருக்கல்யாணம், தங்ககவசம், வைரகிரீடம் சாத்துப்படி நடத்தப்படமாட்டாது. ஜூன் 5ல், இரவு 8 மணிக்கு, ஆவணி மூல வீதிகளில், வெள்ளி கோரதத்தில், திருஞானசம்பந்தர் வீதி உலா நடக்கும், என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !