உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எல்லாம் விதிப்பயன்

எல்லாம் விதிப்பயன்


 செல்வந்தர் ஒருவரிடம் முல்லா பேசிக் கொண்டிருந்தார். செல்வந்தருக்கு திடீரென ஒரு சந்தேகம்.   
‘‘விதி எனறால் என்ன?’’ எனக் கேட்டார்.
‘‘எதிர்பார்ப்பு நிறைவேறாத போது அதையே விதி என்கிறோம்’’‘ என்றார்.
 முல்லாவின் விளக்கம் புரியவில்லை.
‘‘ தெளிவாக சொல்லுங்கள்’’ எனக் கேட்டார் செல்வந்தர்.
‘‘நண்பரே! முதலில் உங்களைச் சந்திக்க வந்த விஷயத்தைக் கூறி விட்டு பிறகு விதி பற்றி விளக்குகிறேன்’’ என்றார்.
‘‘எதற்காக வந்தீர்கள்?’’ கேட்டார் செல்வந்தர்.
‘‘உங்களிடம் ஒரு கோடி பொற்காசுகள் கடனாக வாங்க வந்தேன்’’ என்றார்.
 ‘‘இவ்வளவு பெரிய தொகையைத் திடீரெனக் கேட்டால் எப்படி?’’ என்றார் செல்வந்தர்.
முல்லா சிரித்தபடி,  ‘‘உம்மிடம் கடன் கேட்டால் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிகையுடன் வந்தேன். ஆனால் உங்களால் பணத்தை கொடுக்க முடியவில்லை அல்லது நீங்கள் கொடுக்க விரும்பவில்லை. அப்போது ஏற்படும் ஏமாற்றத்தை ‘எல்லாம் விதிப்பயன்’ என்று சொல்லி மனதை தேற்றிக் கொள்கிறோம்’’ என விளக்கம் அளித்தார்.  
‘‘விளையாட்டாகத்தான் உம்மிடம் பணம் கேட்டேன். மனக்குழப்பம் வேண்டாம்’’ எனச் சிரித்தார் முல்லா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !