உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகா திரிசூலம் வாராஹி அம்மன் கோவிலில் பால்குடம், தீமிதி திருவிழா

மகா திரிசூலம் வாராஹி அம்மன் கோவிலில் பால்குடம், தீமிதி திருவிழா

மயிலாடுதுறை; மயிலாடுதுறை, சீர்காழி அருகே காரைமேடு கிராமத்தில் மகா திரிசூலம் வாராஹி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு நேற்று பால்குடம் மற்றும் தீமிதி திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று காலை சூரக்காடு கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் இருந்து பால்குடம், அலகு காவடிகளோடு மேளதாளங்கள் முழங்க வான வேடிக்கையோடு ஊர்வலமாக கோவிலை வந்து அடைந்தது. பின்னர் வாராஹி அம்மனுக்கு பால், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம், பூக்கள், பழங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாலை கோவிலில் முன்பு தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் சாய் கிரண்சுவாமி மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !