பணத்திற்காக அலையாதீர்
ADDED :2147 days ago
பணத்துக்காக எதையும் செய்யலாம் என்ற நிலை வந்து விட்டது. பணம் மட்டுமே வாழ்க்கை என அனைவரும் கண்ணை மூடி ஓடிக் கொண்டிருக்கின்றனர். இதனால் சட்டத்தை மீறி நடக்கவும் மக்கள் துணிந்து விட்டனர். தனிமனிதன், சமுதாய ஒழுக்கங்கள் இதனால் பாதிக்கப்படுகிறது.
வாழ்வின் இறுதிக்காலத்தைச் சிந்துத்துப்பாருங்கள். நம்முடன் வரப்போவது எதுவும் கிடையாது. சந்ததிக்காக செல்வம் சேர்க்கிறோம் என்றாலும் பணம் அவர்களுடனும் வரப்போவதில்லை.
‘‘பூலோகத்தில் உங்கள் பொக்கிஷங்களை அந்தும், செல்லும் அரித்து விடும். திருடர்களும் கன்னமிட்டுத் திருடுவர்’’ என்பதை மனதில் கொள்ளுங்கள். சம்பாதிக்கும் பணத்தில் பிறருக்கு எப்படி உதவலாம் என்பதில் கவனம் செலுத்துங்கள்.