சேதப்படுத்தப்படும் கற்சிலைகள்
ADDED :1891 days ago
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பராமரிப்பில் உள்ள புதுமண்டபத்தில் கலைநயமிக்க கற்சிலைகள் சேதப்படுத்தப்பட்டு வருகின்றன.
இம்மண்டபத்தில் பாத்திரம், புத்தகம், பேன்ஸி, தையல் கடைகள் உள்ளன. வெளியே நடைபாதை வியாபாரமும் நடக்கிறது. ஒவ்வொரு துாணிலும் கலைநயமிக்க சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அதன் அருமை தெரியாமல் வியாபாரிகள் சிலர் செட் அமைக்கவும், தங்களுக்கான கடை எல்லையை வரையறுக்கவும் சிலைகளை சேதப்படுத்தியுள்ளனர். சிலையை டிரில் மூலம் குடைந்து கம்பியை இணைத்து கடையை பலப்படுத்தி உள்ளனர்.புராதன சின்னங்கள், சிலைகள் கொண்ட இம்மண்டபத்தை வியாபாரிகள் பாதுகாக்கதான் இல்லை. சேதப்படுத்தாமலாவது இருக்கலாமே. கோயில் நிர்வாகம் பாதுகாக்க முன்வரவேண்டும்.