சனீஸ்வரர் கோவிலில் 5 மாதங்களுக்கு பின் பக்தர்கள் தரிசனம்
ADDED :2070 days ago
காரைக்கால்; காரைக்கால், திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனி பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். கொரோனா பரவலால் மூடப்பட்ட வழிபாட்டு தலங்கள், மத்திய, மாநில அரசு வழிகாட்டுதல்படி, கடந்த சில நாட்களுக்கு முன் திறக்கப்பட்டன.இ-பாஸ் முறை அமலில் இருந்ததால், வெளியூர் பக்தர்கள் இக்கோவிலுக்கு வரவில்லை.இந்நிலையில் கடந்த செப்.1ம் தேதி முதல் இ.பாஸ் நடைமுறையை மத்திய அரசு தளர்த்தியதால், மாதத்தின் முதல் சனிக்கிழமையான நேற்று, ஐந்து மாதங்களுக்கு பிறகு வெளி மாநில பக்தர்கள் ஏராளமானோர் வந்திருந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து சனீஸ்வரரை தரிசனம் செய்தனர்.