அம்மன் திருவிழா இன்று துவக்கம்
ADDED :1892 days ago
ஆர்.கே.பேட்டை, ஆவணி மாதம் கொண்டாடப்படும் அம்மன் ஜாத்திரை, இன்று மாலை, எல்லை பொங்கல் உற்சவத்துடன் துவங்குகிறது. வரும் செவ்வாய் இரவு அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.ஆர்.கே.பேட்டை மற்றும் அதன் சுற்றுப்பகுதி கிராமங்களில், ஆவணி மாதம் நான்காம் செவ்வாய்க்கிழமையில், அம்மனுக்கு ஜாத்திரை உற்சவம் நடத்தப்படுவது வழக்கம். அதற்கான எல்லை பொங்கல் வழிபாடு இன்று மாலை நடக்கிறது. பெண்களின் ஐந்து நாள் விரதமும் இன்று துவங்குகிறது.நாளை மறுதினம், இரவு அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. மறுநாள் புதன்கிழமை காலை, அம்மனை கங்கையில் கரைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.கோலாகலமாக ஒரு வாரம் கொண்டாடப்படும் இந்த திருவிழா, நடப்பு ஆண்டு, அரசு விதிகளுக்கு உட்பட்டு, எளிமையாக கொண்டாடவும், சமூக இடைவெளியை பின்பற்றவும் பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.