உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வழிபாட்டு தலங்களின் நிர்வாகிகளுடன் ஆலோசனை

வழிபாட்டு தலங்களின் நிர்வாகிகளுடன் ஆலோசனை

 மயிலாப்பூர்: மயிலாப்பூர் பகுதியில் உள்ள கோவில், சர்ச், மசூதி நிர்வாகிகளுடன், போலீசார் ஆலோசனை நடத்தினர்.கொரோனா தொற்று பரவல் காரணமாக, மார்ச் முதல், வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன.பக்தர்களை அனுமதிக்காமல், கோவில், சர்ச், மசூதிகளில் வழக்கமான பூஜை, திருப்பலி, தொழுகைகள் நடந்தன. விசேஷ நாட்களில் நடந்த நிகழ்ச்சிகள், இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன.இந்நிலையில், தமிழக அரசு செப்., 1 முதல், வழிகாட்டி நெறிமுறைகளுடன், வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதியளித்ததை தொடர்ந்து, அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டன.தொடர்ந்து, மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், மெரினா காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள, அனைத்து வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகிகளுடன், மயிலாப்பூர் உதவி கமிஷனர் நெல்சன் தலைமையில், நேற்று முன்தினம் மாலை ஆலோசனை நடந்தது.இதில், சமூக இடைவெளி, கிருமி நாசினி, அறிவிப்பு பலகை வைப்பது போன்ற, அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை கடைப்பிடிப்பது குறித்து அறிவுறுத்தப்பட்டது.இது குறித்து, தேவாலய நிர்வாகிகள் கூறியதாவது:ஞாயிற்றுக்கிழமைகளில், தேவாலயங்களில் நடக்கும் திருப்பலி வழிபாட்டில், அந்தந்த தேவாலயங்களில் உறுப்பினர்களாக உள்ள, 50 நபர்கள், வாரத்திற்கு ஒரு பகுதியாக பிரித்து, அனுமதிக்கப்பட உள்ளனர்.மற்றவர்கள், 65 வயதிற்கு மேற்பட்டோர், குழந்தைகள் வீட்டில் இணையதளம் வாயிலாக, திருப்பலி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


முடி காணிக்கை செலுத்திய பக்தர்கள்: தான்தோன்றிமலை கல்யணா வெங்கடரமண சுவாமி கோவிலுக்கு, நேற்று, சனிக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள், குடும்பத்துடன் வந்தனர். பல பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.

* கரூர் நகரில் உள்ள அனைத்து, பிரசித்தி பெற்ற கோவில்களிலும் பக்தர்களுக்கு, அர்ச்சகர்கள் திருநீறு, குங்குமம், பூ உள்ளிட்ட பிரசாதங்களை வழங்குவது இல்லை. தரிசனம் செய்ய வரும் பக்தர்களே, பிரசாதத்தை எடுத்து கொள்ள வேண்டும். அதன்படி, நாள்தோறும் ஒவ்வொரு கோவில்களிலும், நூற்றுக்கணக்கான பக்தர்கள், திருநீரு உள்ளிட்ட பிரசாதத்தை தொட்டு எடுத்து செல்கின்றனர். இதனால், வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ளதால், அர்ச்சகர்களே வழக்கம் போல, சுழற்சி முறையில் பிரசாதம் வழங்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !