கொளஞ்சியப்பர் கோவிலில் ஆவணி கிருத்திகை பூஜை
ADDED :1889 days ago
விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் ஆவணி மாத கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நடைபெற்ற வழிபாட்டில் சமூக இடைவெளியை பின்பற்றி பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.