பாலேஸ்வரர் கோவிலில் உச்சிகால பூஜை
ADDED :1889 days ago
கண்டாச்சிபுரம்: சிறுவாலை பாலாம்பிகை உடனுறை பாலேஸ்வரர் கோவிலில் சோமவார உச்சிகால பூஜைகள் நடை பெற்றன. கெடார் அடுத்த சிறுவாலை பாலாம்பிகை உடனுறை பாலேஸ்வரர் கோவிலில், சோமவாரத்தையொட்டி நேற்று மதியம் உச்சிகால பூஜை நடை பெற்றது . இதில் பக்தர்கள் பங்குபெற்ற வாழைப்பூ கலச வழிபாடும், அதனைத்தொடர்ந்து மூலவர் பாலேஸ்வரர் மற்றும் பாலாம்பிகை அம்மனுக்கு சிறப்பு தீபாரதனைகளும் நடை பெற்றன. இதில் சமூக இடை வெளியுடன் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமிகளை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் சம்பத், சிவாச்சாரியார் கோபி ஆகியோர் செய்தனர்.