குருவாயூர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலம்
பாலக்காடு: கேரளாவில் புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி எளிமையான முறையில் கொண்டாடினர். கோவிலில் எல்லா ஆண்டும் ஆவணி மாதம் அஷ்டமி ரோகிணி நாளில் ஸ்ரீஜெயந்தி கொண்டாடுவது வழக்கம்.
நடப்பாண்டு விழா இன்று கொரோனா தொற்று அச்சுருத்தல் காரணத்தால் மிகவும் எளிமையான முறையில் கொண்டாடினர். மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட கோவிலில் காலை 7 மணிக்கு மூலவர் செண்டை மேளம் முழங்க யானை மீது எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது. செண்டை மேளம் பெருவனம் குட்டன் மாரார் தலைமையில் நடந்தது. மாலை 3.30 மணிக்கும் மூலவர் யானை மீது எழுந்தருளினர். இரவு கோவில் சுற்று விளக்குகளால் ஜொலித்தன. மூலவருக்கு அத்தாழ பூஜைக்காக பத்தாயிரம் நெய்யப்பம், 520 லிட்டர் பால் பாயாசம் தயாரித்திருந்தனர். ஆன்லைனில் பதிவு செய்யும் அயிரம் பேருக்கு தரிசனக்கிற்கு தேவஸ்தான நிர்வாகம் அனுமதி அளித்திருந்தனர். கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து 6 மாத இடைவேளைக்கு பிறகு கோவில் பக்தர்களுக்காக திறந்து வழிபாடுகள் மீண்டும் தொடங்கியுள்ளது. விழாவையொட்டி இரவு கிருஷ்ண நடனம் மற்றும் கிருஷ்ணாவதார கதை ஆகியவை கோவில் வளாகத்தில் நடைபெறும்.