துர்கா பூஜை இல்லை என்று கூறியதை நிரூபித்தால் 100 தோப்புக்கரணம் போடுகிறேன்: மம்தா பானர்ஜி
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் இந்த ஆண்டு துர்கா பூஜை கொண்டாட்டங்கள் இல்லை என்று நான் கூறியதாக நிரூபித்தால் 100 தோப்புகரணங்கள் போட தயார் என்று மாநில முதல்வர் மம்தா பானர்ஜி சவால் விடுத்துள்ளார். கொரோனா அச்சம் காரணமாக இந்த ஆண்டு துர்கா பூஜை குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் புரளிகளை கிளப்பி விடுகின்றன. ஆனால், துர்கா பூஜை குறித்து முடிவு எடுக்க இதுவரை எந்த கூட்டமும் நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு துர்கா பூஜை இல்லை என்று மேற்கு வங்க அரசு கூறியதாக நிரூபித்தால், மக்கள் முன்னிலையிலேயே நான் 100 தோப்புக்கரணங்கள் போடத் தயார் என்று மம்தா கூறினார். ‛சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. அது போன்ற போலியான தகவல்களை பரப்பும் சமூக வலைதளங்கள் குறித்து விசாரிக்குமாறு காவல் துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளேன். தவறான தகவல்கள் பரப்பியவர்கள் கண்டுபிடிக்கப் பட்டால் அவர்களை தோப்புக்கரணங்கள் போட வைக்கலாம் இவ்வாறு மம்தா மேலும் தெரிவித்தார்.