உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செப்.,17 மகாளய அமாவாசை: ராமேஸ்வரம் கடற்கரையில் பூஜை

செப்.,17 மகாளய அமாவாசை: ராமேஸ்வரம் கடற்கரையில் பூஜை

ராமேஸ்வரம் : செப்.,17 மகாளய அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் கோயில் அக்னி கடற்கரையில் பக்தர்கள் பூஜை செய்து நீராட, அரசு அனுமதிக்க வேண்டும்.

ஊரடங்கினால் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் நீராடி, தரிசிக்க முடியாமல் தவித்தனர். செப்.,1 ல் கோயில் திறந்தாலும், கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களை நீராட தடை விதித்தனர்.இருப்பினும் தினமும் ஏராளமான பக்தர்கள் கோயில் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு, கோயிலில் தரிசனம் செய்கின்றனர்.இந்நிலையில் செப்., 17ல் புரட்டாசி மகாளய அமாவாசை யொட்டி முன்னோர்கள் ஆன்மாசாந்தியடைய வேண்டி ஏராளமான பக்தர்கள் அக்னி தீர்த்த கடற்கரையில் புரோகிதர்கள் மூலம் திதி, தர்ப்பணம் பூஜை செய்து நீராட ஆர்வமுடன் உள்ளனர். எனவே அக்னி கடற்கரையில் பூஜை செய்ய விதித்த தடையை ரத்து செய்து, பக்தர்கள் முககவசம் அணிந்தபடி பூஜை செய்து, கடலில் நீராட தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !