உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னிமலை முருகன் கோவில் நடை திறப்பு நேரம் மாற்றம்

சென்னிமலை முருகன் கோவில் நடை திறப்பு நேரம் மாற்றம்

சென்னிமலை: சென்னிமலை, முருகன் கோவிலில் நடை திறக்கும், சாத்தும் நேரம் மாற்றம் செய்து, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில், புகழ் பெற்ற சென்னிமலை முருகன் கோவிலில், கொரோனா தொற்று பரவலை தடுக்கவும், பக்தர்கள் நலன் கருதியும் நடை திறப்பு நேரம் மாற்றி அறிவித்துள்ளனர். காலை, 5:30 மணிக்கு இருந்த நடை திறப்பு நேரம், 6:00 மணிக்கும், இரவு நடை சாத்தும் நேரம், 8:00 என்று இருந்ததை, 7:00 மணி என்றும் மாற்றி அறிவித்துள்ளனர். காலை, 6:00 மணி முதல் இரவு, 7:00 வரை மட்டுமே வாகனங்களிலும், படிவழியாகவும் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவர் என, அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !