புஷ்ப அலங்காரத்தில் பிரித்தியங்கிராதேவி
ADDED :2040 days ago
ஆத்தூர்: தேய்பிறை அஷ்டமியையொட்டி, ஆத்தூர், கைலாசநாதர் கோவிலில் உள்ள பிரித்தியங்கிரா தேவிக்கு, நேற்று, சிறப்பு அபி?ஷகம், உலக நன்மை வேண்டி பூஜை நடந்தது. அப்போது, வெள்ளி கவசம், புஷ்ப அலங்காரத்தில் பிரித்தியங்கிராதேவி அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள், சமூக இடைவெளியுடன் தரிசனம் செய்தனர். அதேபோல், ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோவிலில், கால பைரவருக்கு, சிறப்பு பூஜை நடந்தது. கால பைரவர் வெள்ளி கவசம், புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தார். மேலும், ஆத்தூர், கோட்டை காயநிர்மலேஸ்வரர், வீரகனூர் கங்கா சவுந்தரேஸ்வரர், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில், பைரவருக்கு பூஜை நடந்தது.