ஊரடங்கு தளர்வால் உற்சாகம் களைகட்டும் கோயில் விழாக்கள்
ராமநாதபுரம் : கொரோனா ஊரடங்கு தளர்வுகளை தொடர்ந்து கிராமப்புற கோயில்களில் விழாக்கள் களை கட்டத்துவங்கி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆக., செப்., மாதங்களில் அதிகளவில்கோயில் பொங்கல் விழாக்கள், முளைக்கொட்டு ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் விழாக்கள் தடைபட்டன.ஊரடங்கு தளர்வால் கோயில்களில் அதிக கூட்டம் இன்றி போலீஸ் பாதுகாப்புடன் விழாக்கள்நடத்த அனுமதிக்கப்படுகிறது. இதையடுத்து நேற்று ஒரே நாளில் மட்டும் 21 கோயில்களில் பொங்கல்விழா, முளைக்கொட்டு ஊர்வலம், சிறப்பு பூஜைகள் நடந்தது.
பரமக்குடி தாலுகா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட அரியனேந்தல், பாம்பூர், நயினார் கோவில் ஆப்பனுார், எமனேஸ்வரம் முத்துராமலிங்கபுரம்,விளத்துார், மேலாயகுடி, அபிராமம் உடையநாதபுரம், விலக்கனேந்தல், உச்சிப்புளி தில்லை நாச்சியம்மன் கிராமம், சாத்தப்பன் வலசை, சிக்கல் பனிவாசல், பூசேரி, கடம்போடை, செங்கற்படை, சாயல்குடி கடுகுசந்தை சத்திரம், எஸ்.வாகை குளம், பூப்பாண்டியபுரம்,கடலாடி கண்ணன் புதுவன் கிராமம், திருப்புல்லாணி பத்ராதரவை, நைனாமரைக்கான், ரெகுநாதபுரம் கீழவலசை ஆகிய கிராமங்களில் கிருஷ்ணன் கோயில்கள், அம்மன் கோயில்களில் விழாக்கள் நடந்தன.