மழை வேண்டி பாறையில் கூழ் காய்ச்சி ஊற்றி வழிபாடு
ADDED :1890 days ago
உசிலம்பட்டி : உசிலம்பட்டி அருகே பாறைப்பட்டி கன்னிமார் கோயில் மலை பாறையில் காய்ச்சிய கூழ் ஊற்றி மழை வேண்டி மக்கள் வழிபட்டனர். இப்பகுதியில் ஆண்டுதோறும் மழை வேண்டி தாழையூத்து கன்னிமார் கோயில் பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். கிராமத்தில் அனைவரிடமும் காணிக்கையாக கம்பு, கேழ்வரகு, சோளம் உள்ளிட்ட தானியங்களை பெற்று கூழ் காய்ச்சி கோயிலுக்கு எடுத்து வருவர். கோயிலில் பொங்கல் வைத்தபின் கிராமத்தைச் சேர்ந்த ஏழு சிறுமிகளை கன்னிமார் தெய்வங்களாக வழிபட்டு அவர்களிடம் மழை பெய்யுமா என அருள்வாக்கு கேட்பர். மூன்று மாதத்தில் மழை பெய்யும் என்று கூறியதை தொடர்ந்து வழிபாடு செய்தபின் கொண்டு வந்த கூழ் அருகில் உள்ள மலைப்பாறையில் ஊற்றி அனைவரும் குடித்த பின் ஊர் திரும்புவர். நேற்று இந்நிகழ்வு நடந்தது.