பழநி கோயில் அன்னதான பொட்டலங்கள் அதிகரிப்பு
ADDED :1889 days ago
பழநி : பழநியில் செப்.,1 முதல் கட்டுப்பாடுகளுடன் படிப்பாதை வழியாக மலைக்குச் சென்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இதையடுத்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் செப்.,9 முதல் ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானமாக, உணவுப் பொட்டலங்களை கோயில் நிர்வாகம் வழங்கி வருகிறது. இதில் தக்காளி, எலுமிச்சை, தயிர்சாதம் வழங்கப்படுகிறது.இதுவரை தினமும் ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று முதல் 500 பொட்டலங்கள் அதிகரித்து 1500 பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. உணவுப் பொட்டலங்களை வினியோகிப்பதில் சுகாதார நெறிமுறைகள் கடைபிடிக்கப்படும் என, கோயில் இணை ஆணையர் நடராஜன் அறிவித்துள்ளார்.