கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா
ADDED :1889 days ago
ஈரோடு: ஈரோடு, கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி விழா எளிமையாக நடந்தது. ஆவணி மாத, தேய்பிறை அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரத்தில் கிருஷ்ணர் அவதரித்தார். இதன்படி, ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், நேற்று முன்தினம் இரவு, கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா நடந்தது. மகா மண்டபத்தில் எழுந்தருளிய உற்சவர் பாலகிருஷ்ணர் சிலைக்கு, திருமஞ்சன காப்பு, மலர் அலங்காரம், அதை தொடர்ந்து ஊஞ்சல் சேவை சாதித்தல், மஹா தீபாராதனை நடந்தது. குறைவான பக்தர்களே கலந்து கொண்டனர். கொரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டால், நேற்று மாலை நடக்கவிருந்த கிருஷ்ண லீலா விளையாட்டு, வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி மற்றும் ருக்மணி, சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி சப்பர பிரகார வலம் வருதல் ரத்து செய்யப்பட்டது.