கொடை பிரையன்ட் பூங்காவில் புத்தர் சிலை
ADDED :1889 days ago
கொடைக்கானல் : கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவர போதி மரத்தடியில் புத்தர் இருப்பது போன்ற சிலையை அமைத்துள்ளனர். நடப்பாண்டு சீசன் கொரோனா பாதிப்பால் ரத்தானது. தொடர்ந்து பூங்காவில் புதர்மண்டிய இடங்களில் தாவரங்களால் ஆன ஓவியங்களாக மயில், பட்டாம்பூச்சி, சிங்கம், இந்திய வரைபடம் எனபூங்கா நிர்வாகத்தினர் அமைத்தனர்.தற்போது சுற்றுலா வருவோர் ஆன்மீக நாட்டம் மற்றும் தியானம் மேற்கொள்ள ஏதுவாக புத்தர் சிலை மரத்தடியில் அமைக்கப்பட்டும், அதனருகே பிரமிடு போன்ற தோற்றங்களையும் தாவரங்களால் அமைத்துள்ளனர்.மேலும் புத்துணர்வு நடை பயணம் மேற்கொள்ள அக்குபஞ்சர் நடைபாதை கூழாங்கற்களால் 200 மீ., தொலைவுக்கு அமைக்கப்பட்டுகிறது.