சாயல்குடியில் கிருஷ்ண ஜெயந்தி விழா
ADDED :1889 days ago
சாயல்குடி : சாயல்குடி வடக்குத்தெரு பாமா, ருக்மணி சமேத கண்ணன் கோயிலில் ஆவணி அஷ்டமியை முன்னிட்டு கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. இரவு 12:05 மணிக்கு மூலவர்களுக்கு 18 வகையான அபிஷேக, ஆராதனை நிறைவேற்றப்பட்டது. பூச்சொரிதல் நடந்தது.சமூக இடைவெளியை பின்பற்றி பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோயில் தலைவர்முனீஸ்வரன், செயலாளர் குமரன், பொருளாளர் விக்கி உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.பெண்கள் பொங்கலிட்டனர். ரங்கோலி, மாணவர்களின் விளையாட்டுப்போட்டி நடந்தது.