உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாசாணியம்மன் கோவிலில் கிருமிநாசினி தெளிப்பு பணி

மாசாணியம்மன் கோவிலில் கிருமிநாசினி தெளிப்பு பணி

ஆனைமலை:ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், பொள்ளாச்சி தீயணைப்புத்துறை சார்பில், கிருமிநாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், அரசு உத்தரவுப்படி கடந்த, 1ம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்கள் பாதுகாப்புக்காக, சானிடைசர் வழங்குவது, கை, கால்கள் கழுவ ஏற்பாடு, சமூக விலகலை பின்பற்ற அறிவுறுத்தல், என, பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.ஆனைமலை பேரூராட்சி சார்பில், அவ்வப்போது கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. இந்நிலையில், பொள்ளாச்சி தீயணைப்புத்துறை சார்பில், கோவில் முழுவதிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணி நேற்று மேற்கொள்ளப்பட்டது.தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வாகனத்தில், கிருமிநாசினி கலக்கப்பட்டு, பக்தர்கள் கை படும் இடங்களான, கதவுகள், தடுப்புக்கம்பிகளிலும், கோவில் வளாகம் முழுவதிலும் தெளிக்கப்பட்டது. ஒரு நாள் இடைவெளியில் தொடர்ந்து கிருமிநாசினி தெளிக்க திட்டமிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !