உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூம்புகார் விற்பனையகத்தில் பொம்மை கொலு கண்காட்சி

பூம்புகார் விற்பனையகத்தில் பொம்மை கொலு கண்காட்சி

 சென்னை : நவராத்திரியை முன்னிட்டு, பூம்புகார் விற்பனையகத்தில், பொம்மை கொலு கண்காட்சி துவக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கைத்திறத் தொழில் வளர்ச்சிக் கழகம் எனும் பூம்புகார் நிறுவனம், கைவினைஞர்களின் உற்பத்தியை சந்தைப்படுத்தி, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி வருகிறது.அதற்காக, நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, சென்னை, அண்ணா சாலையில் உள்ள, பூம்புகார் விற்பனையகத்தில், பொம்மை கொலு கண்காட்சியை, நேற்று துவக்கி உள்ளது. இதில், தமிழகம், புதுச்சேரி, ராஜஸ்தான், கோல்கட்டா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட, பல மாநிலங்களைச் சேர்ந்த கைவினைஞர்கள் உருவாக்கிய பொம்மைகள், கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.காகிதக் கூழ், பளிங்குத்துாள், சந்தன, நுாக்க, வெண் மரங்களில் தயாரிக்கப்பட்ட கொலு பொம்மைகள், தசாவதாரம், ராமாயணம், கார்த்திகை பெண்கள், திருமண விருந்து போன்ற பொம்மை செட்கள், பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றன. கண்காட்சியில், 50 ரூபாய் முதல், 1.35 லட்சம் ரூபாய் வரையிலான பொம்மைகள் இடம் பெற்றுள்ளன. வாடிக்கையாளர்களுக்கு, 10 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.அக்., 25ம் தேதி வரை நடத்தப்படும் இக்கண்காட்சிக்கு, பார்வையாளர்கள் தினமும் காலை, 10:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை அனுமதிக்கப்படுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !