உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூம்பாறை கோயில் சுவரை சீரமைக்க வேண்டும்

பூம்பாறை கோயில் சுவரை சீரமைக்க வேண்டும்

 கொடைக்கானல் : கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில் வளாகச் சுவரை சீரமைக்க வேண்டும்.

பழநி முருகன் கோயிலின் உபகோயிலாக பூம்பாறை முருகன் கோயில் உள்ளது. ஆண்டு தோறும் இங்கு நடக்கும் தேரோட்டத்தில் பலஆயிரம் பேர் பங்கேற்பர். பிரசித்தி பெற்ற இக்கோயிலுக்கு சுற்றுலா பயணிகளும் ஏராளமாக வருவர். கடந்த வாரம் பெய்த கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து கோயிலின் வளாகச்சுவரை சூழ்ந்ததில் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக காயமின்றி அனைவரும் தப்பினர். இடிந்த சுவரை விரைந்து கட்டாவிடில் மீண்டும் மழைநீரால் அரித்து பக்தர்கள் பாதிக்கப்படலாம். அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !