மனநிறைவே செல்வம்
ADDED :1910 days ago
* போதும் என்ற மனம் இருப்பதே பெருஞ்செல்வம்.
* செல்வம் என்பது பொருட்களை அதிகமாக சேர்ப்பது அல்ல.
* தீர விசாரித்து தர்மவழியில் தீர்ப்பளியுங்கள்.
* செல்வச் செழிப்பிலும் இறைவனை நினைக்க மறவாதே.
* யாசிப்பவனுக்கு ஏதாவது கொடுங்கள். அது காய்ந்த உணவாக இருந்தாலும் சரியே.
* நதிக்கரையில் இருந்தாலும் கூட தண்ணீரை வீணாக்காதீர்.
* குவிந்து விட்ட பொருள் எல்லாம் செல்வம் இல்லை. ஆன்மிகச் செல்வமே செல்வம்.
* பெருமைக்காக ஆடை அணிந்தால் வறுமை உண்டாகும்.
* வீண்செலவும், ஆடம்பரமும் இல்லாத முறையில் உண்ணுங்கள்.
நபிகள் நாயகம்