உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவன்மலை உத்தரவு பெட்டியில் நிறைநாழி படி அரிசி வைத்து பூஜை

சிவன்மலை உத்தரவு பெட்டியில் நிறைநாழி படி அரிசி வைத்து பூஜை

திருப்பூர்:சிவன்மலை கோயிலில் ஆண்டவர் உத்தரவுபொருளாக நிறைநாழி படி அரிசி வைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே சிவன்மலை சுப்ரமணியர் கோயில் உள்ளது. இங்குள்ள கண்ணாடி பேழை ஆண்டவர் உத்தரவு பெட்டி எனப்படுகிறது. சிவன்மலை ஆண்டவர் பக்தரின் கனவில் தோன்றி குறிப்பால் உணர்த்தும் பொருள் இதில் வைத்து பூஜிக்கப்படுவது வழக்கம்.

அந்த பொருளை உத்தரவு பெட்டியில் வைப்பதற்கு முன் மூலவர் முன்னிலையில் அர்ச்சகர்கள் பூ போட்டு உத்தரவு கேட்பர். அதன்பின் அப்பெட்டியில் முன் வைக்கப்பட்ட பொருள் அகற்றப்பட்டு புதிய உத்தரவு பொருள் வைத்து பூஜை செய்யப்படும். இதில் இடம்பெறும் பொருள் ஏதாவது தாக்கம் ஏற்படுத்தும் என்பது நம்பிக்கை. இந்நிலையில் தற்போது நிறைநாழி படி அரிசி வைக்கப்பட்டுள்ளது.சிவாச்சாரியார் கூறியதாவது:நிறைநாழி படி அரிசியும் மங்கல நூல் சுற்றிய ஊசியும் அனைத்து மங்கல நிகழ்ச்சியிலும் இடம்பெறும். நாட்டில் மங்கலகரமான நிகழ்வு அதிகரிக்கும். அரிசி முக்கிய உணவு பொருள் என்பதால் வேளாண் உற்பத்தி அதிகரிக்கும். முத்தூர் வேலம்பாளையத்தை சேர்ந்த கோகுல்ராஜ் 34 என்பவர் கனவில் தோன்றியதன் அடிப்படையில் இவை வைக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !