சண்முகா நதியில் புரட்டாசி அமாவாசை தர்ப்பணம்
ADDED :1845 days ago
பழநி : பழநி சண்முக நதியில் புரட்டாசி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். புரட்டாசி மாத மகாளய அமாவாசையன்று பொதுமக்கள் தரும் தர்ப்பணத்தை ஏற்பதற்காக முன்னோர்கள் பூமிக்கு வருதாக ஐதீகம். அதனால் அந்நாட்களில் நீர்நிலைகளில் அமர்ந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் தருவர். நேற்று புரட்டாசி மகாளய அமாவாசை என்பதால், பழநி சண்முகநதிக் கரையில் திரளானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் தந்தனர். மூதாதையர் பெயர்களை வரிசையாக அழைத்து திதி கொடுப்பதாக கூறினர். குழுவாக சேர்ந்தும், தனித்தனியாகவும் தர்பணம் செய்தனர். அகத்தி கீரை வாங்கி பசுமாட்டுக்கு அளித்தனர். சிலர் அன்னதானம் செய்தனர்.