சேலம் பெருமாள் கோவிலில் புரட்டாசி சிறப்பு பூஜை
ADDED :1844 days ago
சேலம்: புரட்டாசி பிறப்பையொட்டி, சேலம், கோட்டை பெருமாள் கோவிலில், நேற்று, சிறப்பு திருமஞ்சனம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து, ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜ பெருமாள், ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தனர். அதேபோல், கடைவீதி லட்சுமி நாராயணர், வேணுகோபாலர், செவ்வாய்ப்பேட்டை பாண்டுரங்கநாதர், வெங்கடாஜலபதி, பட்டைக்கோவில் வரதராஜர், சிங்கமெத்தை சவுந்தரராஜர், உடையாப்பட்டி சென்றாய பெருமாள், காருவள்ளி சின்னதிருப்பதி வெங்கட்ரமணர் உள்பட, மாவட்டம் முழுதும், பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. அதில், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.